- 00நாட்கள்
- 00மணி
- 00நிமிடங்கள்
- 00விநாடிகள்
UNDP இலங்கையின் முதன்மைத் துவக்கமான இளைஞர் தலைமைத்துவம், புத்தாக்கம் மற்றும் சமூக தொழில்முனைவு ஆகியவற்றின் ஒரு பகுதியாக ‘ஹெகடேவ் பசுமைப் புத்தாக்க சவால்’ திட்டத்தை UNDP அறிமுகப்படுத்துகிறது. இலங்கையில் பசுமையான மற்றும் நிலைபேறான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான புத்தாக்கத் தீர்வுகளை ‘ஹெகடேவ்’ ஒன்றுதிரட்டவுள்ளது. மிகச் சிறந்த பசுமைத் தீர்வுகளுக்கான 2030 அபிவிருத்தித் திட்டத்திற்குள் செயல்திறன்மிக்க பங்களிப்புகளை வழங்குவதில் இலங்கை இளைஞர்களை வலுவூட்டி, அவர்களை நிலைபேறான தொழில் முயற்சியாளர்களாக மாற்றுவதே இந்தச் செயன்முறையின் நோக்கமாகும்.
நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிற்கும் பங்களிப்புச் செய்யும் வகையில் நிலைபேறான சமூக நிறுவனங்களை உருவாக்குவதோடு, சுற்றுச்சூழல் தொடர்பான நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு ஒத்துழைக்கும் புத்தாக்கத் தீர்வுகளைக் கண்டறிவதற்கான சவாலை எதிர்கொள்ளுமாறு ஹெகடேவ் பசுமைப் புத்தாக்க சவால் இலங்கையின் அனைத்து இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கிறது.
ஹெகடேவ் பசுமைப் புத்தாக்க சவால் UNDP மற்றும் Citi Foundation ஆகியன இணை தலைமைத்துவம் வழங்கும் Youth Co Lab Co முன்முயற்சியின் ஒரு பகுதி என்பதோடு, அதன் ஆதரவில் நடைபெறுகிறது.
எந்ததெந்த பகுதிகளுக்கு உங்களால்
பங்களிப்புப் செய்ய முடியும்?
ஒரு புத்தாக்க தீர்வுக்காக உங்கள் சிந்தனையை நீங்கள் வடிவமைத்துக்கொள்ள வழிகாட்டும் சில துணைக் கருப்பொருள்கள் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவை உங்களைக் வரையறுப்பவை அல்ல. பசுமைப் புத்தாக்கத்தின் விரிந்த களத்தில் உள்ள ஏனைய யோசனைகளும் இந்த சவாலுக்கு வரவேற்கப்படுகின்றன.
ஒரு சுழற்சிமுறைப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல்
கழிவு சேகரித்தல், அகற்றுதல், வகை பிரித்தல், மீள்சுழற்சி மற்றும் மீள்பயன்பாடு, கழிவு உருவாக்கத்தைக் குறைத்தல்.
(SDG 12)
நிலைபேறான நீர் முகாமைத்துவம்
நீரைப் பெற்றுக்கொள்வதற்கான அணுகல், நீர்ப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், நீர் மூலங்களைப் பாதுகாத்தல் மற்றும் இவற்றுடன் தொடர்புடைய நிலைபேறான நீர் முகாமைத்துவம்.
(SDG 06)
பசுமைப் பொருளாதாரத்திற்குத் தயாராகுதல்
பசுமைப் பொருளாதார திறன்களை உருவாக்குதல் மற்றும் பசுமைத் திறன்களுக்கான இடைவெளியைக் குறைப்பதற்கான திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள்
(SDGஇ 12)
சூழல்-நேய உற்பத்தி
மற்றும் நுகர்வு
சூழல்-நேய உற்பத்திகளை மேம்படுத்தல் மற்றும் / அல்லது சூழல்-நேய பொருட்கள் மற்றும் சேவைகள் சார்ந்த தொழில்முனைவுகளுக்கு ஒத்துழைத்தல்
(SDG 12)
நிலைபேறான மற்றும் பசுமையான நகர்ப்புற வாழ்வு
பசுமையான உட்கட்டமைப்பின் விருத்திக்கு ஒத்துழைக்கக்கூடிய தீர்வுகளை மேம்படுத்தல்- உதாரணமாக, பசுமையான பொது இடைவெளிகள், பசுமைப் போக்குவரத்துத் தீர்வுகள், நகர்ப்புறப் பூங்காக்கள்.
(SDG 11)
உயிரியல் பல்வகைமை மற்றும் வளப்பாதுகாப்பு
அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சுற்றுச்சூழல் அமைப்புகள், சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட பகுதிகள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் உயிரியல் பல்வகைமை மற்றும் வளப் பாதுகாப்பு தொடர்பாக சமூகம் சார்ந்த விழிப்பூட்டல்
(SDG 15)
செயல்முறை
01
விண்ணப்பங்கள் கோரல்
நாடளாவிய ரீதியில் இருந்து விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்வதற்கான பொதுவான விண்ணப்பம் கோரல்.
பொது விண்ணப்பம் கோரல் ஒரு மாத காலம் அளவில் (30-45 நாட்கள்) திறந்திருக்கும். விண்ணப்பதாரிகள் (குழுக்கள்) தமது விண்ணப்பங்களை (ஆங்கிலம், சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில்) ஹெகடேவ் இணையதளத்தின் ஊடாக சமர்ப்பிக்கலாம்.
02
முன்னதான- ஹெக் நிகழ்ச்சி
இந்த சவாலுக்கு ஆர்வம் காட்டிய விண்ணப்பதாரர்களுக்கு சிறந்த விளக்கத்தை வழங்குவதற்கும் பசுமைப் புத்தாக்க அம்சங்கள் தொடர்பான அவர்களது அறிவையும் புரிதலையும் விரிவுபடுத்துவதற்கும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ள காலப்பகுதியில் திட்டத்தின் மிகச் சரியான எதிர்பார்ப்புகளை விவரிக்கும் அறிவுப் பகிர்வு அமர்வுகள் நிகழ்நிலையில் காணப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட கருப்பொருள்கள் இந்த அமர்வுகளின் ஊடாக விரிவாக விளக்கப்படும். இதன் மூலம் பங்கேற்பாளர்கள் தாம் முன்வைக்கக்கூடிய பல்வேறு தீர்வுகள் பற்றிய புரிதல்களையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.
03
யோசனைகளைக் கேட்டறிதல் மாகாண மட்ட யோசனை சீர்படுத்தல் நிகழ்ச்சிகள்
பொதுவான விண்ணப்பங்கள் கோரலைத் தொடர்ந்து, குறுகிய பட்டியலிடப்பட்ட யோசனைகளுக்கான மெய்நிகர் சீர்படுத்தல் நிகழ்ச்சிகள் (மாகாண மட்ட) இந்தக் கட்டத்தில் உள்ளடங்கும். இந்த நிகழ்வில் விண்ணப்பதாரர்கள் பங்கேற்று, தமது யோசனைகளை நடுவர் குழாத்திடம் முன்வைத்து, சீர்படுத்திக்கொள்ள வேண்டும். சிறந்த யோசனைகளைக் கொண்ட 20 அணிகள் திட்டத்தின் அடுத்த கட்டமான, சமூகப் புத்தாக்க முகாம்களுக்குத் தெரிவுசெய்யப்படும்.
04
சமூகப் புத்தாக்க முகாம்கள்
சமூகப் புத்தாக்கம் மற்றும் சமூகத் தொழில்முனைவு தொடர்பான, வதிவிட வசதிகளுடன் கூடிய, வடிவமைப்பு சிந்தனைக்கான ஐந்தரை நாள் பயிற்சி முகாம்கள் (Boot Camps).
மாகாண மட்டத்தில் யோசனைகளைக் கேட்டறிந்த பின்னர் தெரிவுசெய்யப்படும் சிறந்த 20 அணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு தனித்துவமான, வடிவமைப்பு சிந்தனைப் பயிற்சி முகாமின் (Boot Camp) அனுபவமே சமூகப் புத்தாக்க முகாம்களாகும். தேசிய மற்றும் சர்வதேச வழிகாட்டிகள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் கள நிபுணர்களின் ஆதரவுடன் வடிவமைப்பு சிந்தனைச் செயல்முறையின் பலதரப்பட்ட படிமுறைகள் தொடர்பாக ஒரு விரிவான கற்றல் செயல்முறையை உள்ளடக்கியிருக்கும் வடிவமைப்பு சிந்தனையை மையப்படுத்திய கற்றலிலிருந்து விலகி நிற்கும் ஒரு ஐந்தரை நாள் செயல்முறையை அணிகள் மேற்கொள்ளும்.
மீண்டும் மீண்டும் சரிபார்க்கும் பொறிமுறைக்கு உட்படுத்தப்பட்டு விரும்பப்படும், சாத்தியமான மற்றும் நம்பகமான ஒரு கருத்தாக்கத்தை நோக்கி வந்தடைவதற்கு ஆழமாக சிந்திக்கவும், மீள சிந்திக்கவும், அவர்களுடைய கருத்துக்களை மேம்படுத்த அல்லது ஒன்றாகக் குவிக்கவும் முகாமின் ஊடாகப் பயிற்றுவிக்கப்படும் அணிகளுக்கு முடியுமாக இருக்கும்.
05
துவக்கநிலை வளர்ப்புப் படிமுறைக்கான ஆதரவு மற்றும் ஆரம்ப நிதிக் கொடுப்பனவு
யோசனைகளை மேலும் மேம்படுத்தவும், ஒரு சமூக நிறுவனமாக/ துணிகர முயற்சியாக முன்னோக்கி நகர்வதற்கும், தெரிவுசெய்யப்பட்டுள்ள அணிகளுடைய துவக்கநிலை வளர்ப்புப் படிமுறைக்கான ஆறு மாத கால தீவிர ஆதரவு மற்றும் ஆரம்ப நிதிக் கொடுப்பனவு.
இந்த நிலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அணிகளுக்கு அவர்களுடைய மூலப்படிமங்களை (prototypes) மேலும் மேம்படுத்துவதற்காக ஒரு ஆரம்ப நிதிக் கொடுப்பனவு வழங்கப்படும். ஆரம்ப முதலீடுகளின் கொடுப்பனவை ஒரு ஆலோசனை நிறுவனம் முகாமைத்துவம் செய்யும். வெவ்வேறு துறைகளில் செயலாற்றும் பலதரப்பட்ட நிபுணர்களின் மூலமாக ஒரு ஆறு மாத காலத்திற்கு அறிவுரை மற்றும் வழிகாட்டுதல் என்பன வழங்கப்படும். ஆரம்ப முதலீடு என்பது ஒரு அடைவை நிறைவுசெய்வதை அடிப்படையாகக்கொண்டு வழங்கப்படும்.
விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்
உத்தியோகபூர்வ பதிவுத் தளமான hackadev.lk ஊடாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம்.
செப்டம்பர் 19, 2022 பி.ப 11.59 மணி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி ஆகும்.
2018, 2019, 2021 ஆம் ஆண்டுகளில் ஹெகடேவ் தேசிய இளைஞர் சமூகப் புத்தாக்க சவாலுக்கான சமூகப் புத்தாக்க முகாம்களின் நிலையில் பங்கேற்ற நபர்கள் 2022 ஆம் ஆண்டுக்கான ஹெகடேவ் பசுமைப் புத்தாக்க சவால் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்குத் தகுதிபெற மாட்டார்கள்.
ஆங்கிலம், சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் உங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
ஒரு அணி குறைந்தபட்சம் 3 உறுப்பினர்களையும் அதிகபட்சம் 4 உறுப்பினர்களையும் கொண்டிருக்கலாம்.
விண்ணப்ப முடிவுத் திகதியின் போது அணியின் அனைத்து உறுப்பினர்களும் 29 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் ஒரு பெண் உறுப்பினரையாவது உள்ளடக்கியிருக்க வேண்டும்.
பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கு, தேர்வுக்கான செயல்முறையின் போது இயலாமை மற்றும் / அல்லது இனப் பன்முகத்தன்மை மற்றும் பால்நிலை சார்ந்த சமத்துவமான பிரதிநிதித்துவத்தை மையப்படுத்திய இளம் வயதினருடன் கூடிய அணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் தவிர, தெரிவுசெய்யப்பட்டுள்ள அணிகள் தங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சியில் (நிகழ்நிலை மூலமாக) கலந்துகொள்ள வேண்டும்.
● நீங்கள் பரிந்துரைக்கும் தீர்வு / அணிகள் முன்வைக்கும் யோசனையை மேலும் விளக்குவதற்காக அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வழங்கப்படும்.
● நடுவர்களுடனான கேள்வி- பதிலுக்கு அதிகபட்சமாக 5-7 நிமிடங்கள் வழங்கப்படும்.
● இந்தக் கட்டம் ஒரு மூலப்படிமத்தை (prototype) வழங்குவதற்காக அல்ல
● கேட்டறிதலுக்காக ஒரு ppt/ மற்றுமொரு விளக்கக்காட்சியை செய்யுமாறு அணிகள் எதிர்பார்க்கப்படவில்லை (வாய்மொழி சார்ந்த விளக்கமளித்தல் மட்டுமே).
● யோசனைகளைக் கேட்டறியும் போது பெற்றுக்கொள்ளப்படும் புள்ளிகளைத் தொடர்ந்து, சமூகப் புத்தாக்க முகாம்களுக்குப் பங்கேற்கவென தெரிவுசெய்யப்பட்டுள்ள அணிகள் மேலும் வகைப்படுத்தப்பட்டு, தெரிவுசெய்யப்படும்.
தவிர்க்க முடியாத சூழ்நிலைகளைத் தவிர, சமூகப் புத்தாக்க முகாம்களில் பங்கேற்பது தெரிவுசெய்யப்பட்டுள்ள அணிகளுக்கு கட்டாயமானதாகும்.
●தெரிவுசெய்யப்பட்டுள்ள அணிகள், அடிப்படைக் கட்டமைப்பை வடிவமைத்து, அதனை உருவாக்குவதற்கான ஆரம்பத்தை மேற்கொள்ளலாம் என்பதுடன் தெரிவுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட தினத்திலிருந்து செயற்றிட்டத்திற்குத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்ளலாம். ஆனால், ஏற்கனவே நிறைவுசெய்யப்பட்ட உற்பத்தி/ சேவைகளை போட்டிக்குக் கொண்டுவர அனுமதிக்கப்பட மாட்டாது.
● சமூகப் புத்தாக்க முகாம்களின் முடிவில் அனைத்து அணிகளும் தமது தீர்வுகளை முன்வைத்து, அவற்றை வழங்க முடியுமாக இருக்க வேண்டும்.
● அணிகள், தாம் விரும்பக்கூடிய தொழில்நுட்பம், தளம் மற்றும் கருவிகளைப் பயன்படுத்த முடியும்.
● சமூகப் புத்தாக்க முகாம், ஐந்தரை நாட்கள் வதிவிட வசதியுடன் கூடிய, அனைத்துச் செலவினங்களும் செலுத்தப்பட்ட ஒரு பயிற்சி அனுபவமாகும்.
● சமூகப் புத்தாக்க முகாமிற்கு அதிகபட்சம் 20 அணிகள் தெரிவுசெய்யப்படும். (ஒரே ஒரு சமூகப் புத்தாக்க முகாமே நடத்தப்படும்)
உரிமம்
● உருவாக்கப்படும் கருத்துக்கள் மற்றும் தீர்வுகள் அந்தந்த அணிகளுக்குத் சொந்தமானவையாகவே இருக்கும்
பின்வரும் தேர்வு அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு அணிகள் மதிப்பிடப்படும்.
● தீர்வு, பொருத்தமான பிரச்சினைக்குத் தொடர்புடையதாக இருத்தல் வேண்டும்.
● படைப்பாற்றல் மற்றும் மட்டில்லாத பரந்த சிந்தனை
● விரிவாக்குதல் மற்றும் அமுல்படுத்தலுக்கான எளிய மற்றும் சாத்தியமான தன்மை
● கூட்டு முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு
● தாக்கம்
● வடிவமைப்பு
மேலே வழங்கப்பட்டுள்ள அளவுகோலின் படி, சமர்ப்பிக்கப்பட்டவைகளை மதிப்பாய்வு செய்யக்கூடிய ஒரு பல-பங்குதாரர் பரிசோதனைக் குழாத்தினால் ஒவ்வொரு கட்டத்திற்கும் அணிகள் தெரிவுசெய்யப்படும். பரிசோதனைக் குழாம் மற்றும் நடுவர் குழாமினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களே இறுதியானவை.
சமூக நிறுவனத்தின் துவக்கநிலை வளர்ப்புப் படிமுறை நிகழ்ச்சிக்காக அதிகபட்சம் 05 யோசனைகள் தெரிவுசெய்யப்பட்டு, அவை ஆரம்ப முதலீட்டுக்குத் தகுதி பெற்றவையாகக் கருதப்படும்.
மூலதனக் கொடுப்பனவு மற்றும் துவக்கநிலை வளர்ப்புப் படிமுறைக்கான ஆதரவு என்பன அவசியப்படும் துவக்கநிலை வளர்ப்புப் படிமுறைக்கான நிபுணத்துவத்துடன் கூடிய ஒரு தெரிவுசெய்யப்பட்ட ஆலோசனை முகவரின் ஆதரவுடன் UNDP யால் ஆரம்பிக்கப்பட்டு, மேற்பார்வை செய்யப்படும். குறிப்பிட்ட முகவருடன் 06 மாதத்திற்கான துவக்க நிலை வளர்ப்புப் படிமுறைச் செயற்றிட்டத்துடன் அணிகள் உடன்பட வேண்டும் என்பதோடு, தீர்வை உருவாக்கவும், பரிசோதிக்கவும், செயற்படுத்தவும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எவ்வகையான பதிப்புரிமைத் திருட்டும் கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் நிகழ்ச்சியின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறானதொரு திருட்டு அடையாளப்படுத்தப்பட்டால், செயல்முறையைத் தொடர்வதற்கான தகுதியை விட்டும் விண்ணப்பதாரர்கள் நீக்கப்படுவார்கள்.